என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகராட்சி ஊழியர்கள்"
- உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம்
- அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங் காங்கே சுற்றித்திரிவதாக வாணியம்பாடி நகராட்சி அதிகா ரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று வாணியம்பாடிசி.என்.ஏ. சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்து மாடுக ளையும் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது.
- நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் நகராட்சியல் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிக்கு நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய் மூலம் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோபி செட்டி பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது. மேலும் அந்த தண்ணீர் அருகில் இருந்த கால்நடை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியது.
இதுப்பற்றி தெரியவந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர்அவர்கள் குடிநீரை நிறுத்தி விட்டு குழாய் உடைப்பை செய்தனர். பின்னர் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் குழாய் உடைப்பால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியமாக மாறியது.
- சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
- நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றி திரியாமல் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளை 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீட்கவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்